அம்பத்தூரில் அண்ணல் அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தில் மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 December 2025

அம்பத்தூரில் அண்ணல் அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தில் மாலை அணிவித்து மரியாதை.


அம்பத்தூர், டிசம்பர் 6 —

அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பத்தூர் டன்லப் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஜி தலைமையேற்றார். மாநில இளைஞரணி செயலாளர் பரணி ஜி, திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் பாலசிங் ஜி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் ஜி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பச்சையப்பன் ஜி, இளைஞரணி பொறுப்பாளர் பிரபு ஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.


பின்னர் மாநிலத் தலைவர் ஆவடி ஸ்டாலின் ஜி அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார். நிகழ்வை முன்னிட்டு பங்கேற்றோர் அம்பேத்கர் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் அமைதியாக அஞ்சலி செலுத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad