தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்தி வரப்பட்ட 11கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது. தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்து ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில் பண்டல் பண்டலாக கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பேருந்தில் கடத்தி வரப்பட்ட 11கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ஓசூரை சேர்ந்த அருண் மேத்யூ ஹென்றி (20) என்ற இளைஞரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment