பாண்டேஸ்வரம், கலைஞர் நகரைச் சேர்ந்த ஸ்டாலின் (41) தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தில் மாநிலத் தலைவராகவும், சமூக தொடர்பான பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் செய்து வருபவராகவும் உள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக சிலர் அவரை பின்தொடர்ந்து அச்சுறுத்துவதாக குடும்பத்தினர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான புகார் கடந்த மாதமே போலீசில் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், டிசம்பர் 3ஆம் தேதி அலீம் பாட்ஷா என்ற பெயரில் உள்ள ஃபேஸ்புக் கணக்கிலிருந்து ஸ்டாலினுக்கு மெசஞ்சர் மூலம் மூன்று வாய் பதிவு செய்திகள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோவில் அரசியல் தலைவர்கள் தொடர்பாக கண்டன கருத்துகளும், மிரட்டல் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதாக ஸ்டாலின் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும் தன்னை மற்றும் குடும்பத்தாரை குறித்தும் அவதூறு மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்டாலின் கூறினார்.
இதையடுத்து, அலீம் பாட்ஷா என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி போலீஸ் கமிஷனரிடம் அவர் நேற்று முறையிட்டார். போலீசார் புகாரை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.jpg)
No comments:
Post a Comment