மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் 84.66 கோடி மதிப்பில் பனப்பாக்கம் கிராமத்தில் ஆச்சி குழுமத்தின் பதப்படுத்தும் புதிய தொழிற்சாலையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 19 September 2024

மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் 84.66 கோடி மதிப்பில் பனப்பாக்கம் கிராமத்தில் ஆச்சி குழுமத்தின் பதப்படுத்தும் புதிய தொழிற்சாலையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


திருவள்ளூர் மாவட்டம் பனபாக்கம் கிராமத்தில் வேர்ல்ட் ஃபுட் இந்தியா 2024 ஆச்சி மசாலா  குழுமத்தின் சார்பில் 84 கோடியே 66 லட்சம் மதிப்பில் பதப்படுத்தும் புதிய தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளிகாட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதில் ஆச்சி உணவுக் குழுமத்தின் தலைவர் பத்மசிங் ஐசக், ஆச்சி குழும செயல் இயக்குனர்கள் அஸ்வின் பாண்டியன், அபிஷேக் ஆபிரகாம் ஆகியோர்  பங்கேற்றனர். இந்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் ஆச்சி குழுமத்தின் பங்களிப்பு பற்றி ஆச்சி உணவுக் குழுமத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் பேசுகையில் இந்தியா முழுவதும் மட்டுமன்றி 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு 220 வகையான தரம் நிறைந்த உணவுப் பொருட்களை தயார் செய்து 15 லட்சம் சிறுக்கடைகள் வழியாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் கைகளில் ஆச்சி நிறுவனம் கொண்டு போய் சேர்க்கிறது என்றும் உள்நாட்டு  உற்பத்தி திறனை அதிகரிக்கவும் ஏற்றுமதியை பெருக்கவும் மத்திய அரசு ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகம் செய்து 14 துறைகளை சேர்ந்த தலைசிறந்த நிறுவனங்களைத் தேர்வு செய்து இந்த திட்டத்தை செயல்படுத்தினார்க ள் அதில் முக்கியத்துவம் வாய்ந்த உணவு பதப்படுத்துதல் துறையில் ஆச்சி உணவு குழுமத்தை தேர்வு செய்தது மகிழ்ச்சியான செய்தியாகும் மத்திய அரசின் அற்புதமான இந்த திட்டத்தில் ஆச்சி இடம் பெற்றது.


மிகச் சிறந்த பெருமையாகவும் அங்கீகாரமாகவும் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் இந்த வாய்ப்பை அளித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், உணவு பதப்படுத்தல் தொழில் துறை அமைச்சகத்துக்கும் திட்ட மேலாண்மை நிறுவனத்திற்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இதற்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி வரும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஆச்சி குழும செயல் இயக்குனர்கள் அஸ்வின் பாண்டியன் அபிஷேக் ஆபிரகாம் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும்  மனதான பாராட்டுகளை  தெரிவிப்பதாகவும் கொரோனா காலத்தில் பல்வேறு பெரு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தி அனைவருக்கும் ஊக்கத்தை தந்துள்ளதாகவும் இத்திட்டத்தின் கீழ் ஆச்சி குழுமம் 84 கோடியே 66 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறது என்றும் 45 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்சாலைகளின் கட்டமைப்பினை மேம்படுத்தியும்  40 கோடி ரூபாய் மதிப்பில் நவீன இயந்திரங்கள் பயன்பாட்டிற்காக முதலீடு செய்துள்ளதாகவும் புதிதாக திறக்கப்பட்ட தொழிற்சாலையில் ஆண்டுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன்  உற்பத்தியைஉயர்த்தி உள்ளதாகவும் 9000 மெட்ரிக் டன் மிளகாய் அரைக்கப்படுவதாகவும் மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின்  மூலம் ஆண்டுக்கு  420 பேர் கூடுதலாக. வேலைவாய்ப்பினை பெறுவதாகவும் 2024 ஆம் ஆண்டு ஆச்சி உணவுக் குழுமம் 2400 கோடி ரூபாய் விற்பனையை பதிவு செய்துள்ளதாகவும் அடுத்த நிதியாண்டில் 3000 கோடி என்ற விற்பனை இலக்கை எட்டி விடுவோம் என்றும் பிரதமரின் 2025 ஆம் ஆண்டு ஐந்து ட்ரில்லியன் டாலர் இலக்கிற்கான  பங்களிப்பை தாங்களும் வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad