குடிநீர் பாட்டிலில் ரப்பர் பேண்ட் இருந்ததால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 17 September 2024

குடிநீர் பாட்டிலில் ரப்பர் பேண்ட் இருந்ததால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


திருவள்ளூர் மாவட்டம் வாணியஞ்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா இவர், பெரியபாளையம் செல்லும் போது, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் குடிநீர் பாட்டில் வாங்கி சென்றதாக தெரிகிறது.


காரில் குடும்பத்துடன் சென்ற போது அவரின் மகள், குடிப்பதற்காக அந்த பாட்டிலை திறக்க முற்பட்டபோது, குடிநீர் பாட்டிலில் ரப்பர் பேண்ட் இருப்பதை கண்டு தனது தாயிடம் சொல்ல, குடிநீர் பாட்டில் வாங்கிய கடைக்கு திரும்பி வந்து கேட்ட போது, டீலரிடம் கூறுவதாக கடைக்காரர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


2 நாட்கள் கழித்து மீண்டும் கடைக்காரரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு டீலர் சரியான விளக்கம் தரவில்லை என  கிருத்திகா. தெரிவித்ததால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார், குடிநீர் பாட்டிலில் ரப்பர் பேண்ட் இருந்தால், அது குடிநீரில் ஊறி, தண்ணீர் கெட்டு இருக்கும் எனவும், அந்த தண்ணீரை குடித்தால் பாதிப்பு வரும், உயிருக்கு அபாயம் வரும் எனவும், உணவு பாதுகாப்பு துறை மற்றும் அரசு துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாட்டிலில் முறையாக தேதி கூட அச்சடப்பவில்லை எனவும் தெரிவித்த அவர்  உணவு பாதுகாப்பு துறை   பொதுப்பணித்துறை வருவாய்த்துறை  சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதன் மூலம் வேறு கம்பெனி நிர்வாகம் ஜாக்கிரதையாக செயல்படும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad