பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 September 2024

பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.


பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகள் இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் அனைத்தும் முறையாக தூய்மை பணிகள் மேற்கொள்ளாததால் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. 

மேலும் கழிப்பறை குழாய் மற்றும் கதவுகள் சிதிலமடைந்துள்ளதால் மாணவிகள் கழிப்பறையை பயன்படுத்த மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக மாணவிகள் பள்ளியில் உள்ள புகார் பெட்டியில் கடிதங்களை மாணவிகள் போட்டதை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர் ரவிச்சந்திரன்  பொன்னேரி கல்விமாவட்ட கல்வி அலுவலர் கஸ்தூரி, பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர்  பள்ளியில் ஆய்வு செய்து மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் பள்ளியில்  R0 குடிநீர் இயந்திரம் பழுதாகி  இருப்பதை தொடர்ந்து தலைமை ஆசிரியரிடம் சரி செய்து குடிநீர் வழங்க தெரிவித்தார் மேலும் பள்ளியில் இரவு நேரங்களில் பள்ளியில் துப்புரவு பணியாளர்கள் இரவு காப்பாளர்கள் வேலை காலியாக இருப்பதாகவும் அதனைப் பூர்த்தி செய்ய முதன்மை கல்வி அலுவலரிடம் நகர மன்ற தலைவர் தெரிவித்தார்  இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாலச்சந்தர்,ரமேஷ் தன்ராஜ்,, உட்பட பலர் உடன் இருந்தனர் 

No comments:

Post a Comment

Post Top Ad