பொன்னேரி அருகே அரசு பள்ளி மாணவனை தலைமை ஆசிரியை தாக்கியதை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை ஆசிரியையிடம் வாக்குவாதம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 September 2024

பொன்னேரி அருகே அரசு பள்ளி மாணவனை தலைமை ஆசிரியை தாக்கியதை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை ஆசிரியையிடம் வாக்குவாதம்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த கிரண் என்ற மாணவர் 8ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் மாணவனை தலைமை ஆசிரியை உஷா ராணி தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து தலைமை ஆசிரியையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களும், பெற்றோரும் பள்ளியின் முன் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவன் கிரண் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவனை தலைமை ஆசிரியை தாக்கியதாக கூறி பெற்றோர் முற்றுகையிட்டுள்ளதால்  இது குறித்து  தகவல் அறிந்த  பொன்னேரி காவல் ஆய்வாளர் குணசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது 

No comments:

Post a Comment

Post Top Ad