திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவர்களுக்கு 19ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்ட தலைமை செயல் அலுவலர் ஜெயப்பிரகாசன் கலந்து கொண்டு 373 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், எந்தக் துறையை மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த துறையில் முதல்வனாக விளங்க வேண்டும் என்பதே நான் முதல்வன் திட்டம் என்றும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மட்டுமே போதாது சுற்றியுள்ள சமுதாயத்திற்கு பாடுபட வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும் என்றும் நான் முதல்வன் திட்டம் மூலம் 37 லட்சம் மாணவர்கள் 90 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றும் கடந்த 22 -23 ஆம் ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் இதன் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் இந்த ஆண்டு 98 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாகவும் ஏற்கனவே கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் வேலைவாய்ப்பு பெறாதவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் புதிய திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர்களுக்கு நான்கு மாத பயிற்சி வழங்கப்பட்டு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் தங்கும் வசதி உணவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் தரமான வேலை வாய்ப்பு கல்வியை வழங்க வேண்டும் தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முதன்மையாக முன்னேற்றும் வகையில் தமிழ்நாடு தொழில் துறையில் முன்னேற்றம் அடையவும் இளைஞர்கள் தொழில் முனைவர்களாகவும் திறன் மிகுந்தவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் செயல்படுகிறது என்றும் தமிழகத்தில் உள்ள 373 பொறியியல் கல்லூரிகள் 872 அறிவியல் கலை கல்லூரிகள் 451 தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இதன் மூலம்பயிற்சி வழங்கப்படுவதாகவும் கல்லூரியில் ஒவ்வொரு பருவத்திற்கும் 15 லட்சம் பேருக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் பல்வேறு பெரிய நிறுவனங்களுடன் இணைந்து இதனை செயல்படுத்தி வருவதாகவும் சிங்கப்பூர் ஆஸ்திரேலியா ஜெர்மனி போன்ற உலக நாடுகளுடன் நமது மாணவர்களை திறன்மிக்கவர்களாக உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதில் கல்லூரி முதல்வர் தாமோதரன் கல்லூரி செயலர் ரமேஷ் பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..
No comments:
Post a Comment