திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் ஆகியவற்றில் நிலக்கரி எரியூட்டப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சார உற்பத்திக்காக எரியூட்டப்படும் நிலக்கரி சாம்பல் அனல் மின் நிலையங்களுக்கு அருகில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் சிமெண்ட் தொழிற்சாலை, ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நாள்தோறும் இந்த லாரிகளில் இருந்து பரவும் கழிவுகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மீஞ்சூரில் அதிக பாரத்துடன் அசுர வேகத்தில் சென்ற லாரி ஒன்றில் இருந்து சாம்பல் கழிவுகள் பஜார் முழுவதும் சிதறியது. தொடர்ந்து அடுத்தடுத்த வாகனங்கள் சிதறிய சாம்பல் கழிவுகளின் மீதேறியதால் காற்றில் பறந்து மீஞ்சூர் பஜார் முழுவதும் புழுதிக்காடாக மாறியது.
இதனால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதிக பாரத்துடன், தார்பாய் கொண்டு மூடப்படாமல் கொண்டு செல்லப்படும் சாம்பல் கழிவு லாரிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment