இந்திய கிறிஸ்தவ வாலிபர் சங்க 18.ம் ஆண்டு விழா வாலிபர் எழுப்புதல் பெருவிழா/ 2023 -24 .ம் ஆண்டு அரசு பொது தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காயத்ரி நகரில் உள்ள மிஸ்பா ஜெப கூடாரத்தில் இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்க 18.ம் ஆண்டு விழா ,வாலிபர் எழுப்புதல் பெருவிழா, 2023 -24 ஆம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் குருசாலமோன் தலைமை தாங்கினார் . பாஸ்டர் பெஞ்சமின், ஜேம்ஸ், அர்ஜுனன், அருள்தாஸ், சுபாஷ், தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் ஆபிரகாம் பாலாஜி அனைவரும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூர் சகோ- ராஜ் ,மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் சுமதி தமிழ் உதயன், அபூபக்கர் ஆகியோர் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி விருதுகள், பரிசு சான்றிதழ் வழங்கினர்.
இதில் ஆண்ட்ரூஸ், சிவா, அமுல்ராஜ், செந்தில், ராம் டேனியல், நிஜந்தன், சிம்சன், செல்வின், பாஸ்டர் ஸ்டீபன், எட்வின் ,பால் உதயசூரியன், மாற்கு, மைக்கேல்ராஜ், ஆபிரகாம், கேபா , இயேசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ராஜன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment