திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஆரோக்கிய அன்னை ஆலய 8ம் ஆண்டு பெருவிழா நடைபெற்றது கடந்த வெள்ளிக்கிழமை மீஞ்சூர் இடைவிடா சகாய மாதா பங்குத்தந்தை அருளப்பா தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு திருப்பலி நடைபெற்றது சனிக்கிழமை நற்கருணை பவனி விழா மீஞ்சூர் இடைவிடா சகாய மாதா உதவி பங்குத்தந்தை தாமஸ் தீபக் தலைமையில் நடைபெற்றது.
தேர் திருவிழாவில் புனித பாத்திமா அன்னை திருத்தலம் கோடம்பாக்கம் பங்குத்தந்தை தாமஸ் இளங்கோ தலைமையில் ஆரோக்கிய அன்னை தேர் பவனி அத்திப்பட்டு பஜாரில் இருந்து அன்னையின் அருளை பாடல் மூலமாக பாடியபடி ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தது பின்னர் நடைபெற்ற திருப்பலியில் அன்னையின் அன்பு இயேசு கிறிஸ்துவின் ஆசிர்வாதங்கள் வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன விழாவில் பங்குத்தந்தையர், அருட் சகோதரிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பங்கு மக்கள் கலந்து அன்னையின் அருளை பெற்றனர்
No comments:
Post a Comment