ஒன்றிய குழு ஒப்புதல் பெறாமல் திறந்து வைத்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மறு சீராய்வு செய்து புணரமைத்து திறக்க மாவட்ட ஆட்சியரிடம் ஒன்றிய குழு பெருந்தலைவர் புகார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 9 September 2024

ஒன்றிய குழு ஒப்புதல் பெறாமல் திறந்து வைத்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மறு சீராய்வு செய்து புணரமைத்து திறக்க மாவட்ட ஆட்சியரிடம் ஒன்றிய குழு பெருந்தலைவர் புகார்.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஏ என் குப்பம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 20 லட்சமும் ஒன்றிய பொது நிதியின் கீழ் 3.49 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 23.49 லட்சத்தில் கடந்த 29- 6 -2024 நிர்வாக அனுமதி பெறப்பட்டு கும்மிடிப்பூண்டி ஊராட்சி  ஒன்றிய குழு ஒப்புதல் பெறாமல் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 5ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.


இது குறித்து தகவல் அறிந்த ஒன்றிய பெருந்தலைவர் சிவகுமார்  அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இரண்டு மாதத்திற்குள் எப்படி கட்டி முடிக்க முடியும் எனவும் பழைய கட்டிடத்தை சீரமைத்து திறக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளதாகவும்  ஒன்றிய பொது நிதியில் கட்டப்பட்ட ஊராட்சிக்குட்பட்ட ஒன்றிய குழு உறுப்பினர் ஒன்றிய குழு துணை தலைவர் ஒன்றிய குழு தலைவர் ஆகியோருக்கு அழைப்பு இல்லாமல்  புறக்கணிக்கப்பட்டு, கல்வெட்டில் பெயர் பதிவு செய்யாமலும் ஊராட்சி மன்ற சட்டத்திற்கு புறம்பாக காணப்படுவதால் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து கல்வெட்டை மறு ஆய்வு செய்து புனரமைத்து வேறொரு நாள் திறப்பு விழாவினை நடத்தவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் மனுவில் தெரிவித்தார் இச்சம்பவம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மற்றும் ஏ என் குப்பம் ஊராட்சியில் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad