பிரியாணி, சிக்கன் லாலிபாப், சாப்பிட்ட 10 க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, நகர மன்ற தலைவர் நேரில் ஆய்வு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 22 September 2024

பிரியாணி, சிக்கன் லாலிபாப், சாப்பிட்ட 10 க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, நகர மன்ற தலைவர் நேரில் ஆய்வு.


பொன்னேரியில் பிரபல தனியார் பிரியாணி உணவகத்தில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அன்று பிரியாணி, லாலிபாப் சிக்கன்,  சவர்மா போன்றவற்றை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்ட 10ற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம், உடல் உபாதை போன்றவற்றை ஏற்பட்டு பொன்னேரி, மீஞ்சூர்,  கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் மற்றும் தனியார்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து புகாரின் பேரில் மீஞ்சூர் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகர்  பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் உணவகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இறைச்சி மற்றும் சமையல் எண்ணெயை பார்வையிட்ட பொழுது உணவிற்கு பயன்படுத்தப்படும் என்னைய் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்  எனவும், மேலும் சுத்தமில்லாத எண்ணையை ஆய்வு செய்த பொன்னேரி நகராட்சியின் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் அதனை உடனடியாக அகற்றக்கோரி உணவகத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளார், பின்னர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிக்கன் மற்றும் உணவுகள் மாதிரி எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார் சிக்கன் பிரியாணி சிக்கன் லாலிபாப் சாப்பிட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பொதுமக்கள் தெரிவித்ததாவது பொன்னேரி மீஞ்சூர் சோழவரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் துரித உணவகங்கள், , கூல் பார், டீ ஸ்டால்,, காணப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வருடத்திற்கு ஒரு முறையாவது ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இதனால் இவற்றை தடுக்க முடியும் எனவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர் 

No comments:

Post a Comment

Post Top Ad