பழவேற்காடு அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் வழியில் பள்ளி மாணவ மாணவிகளை அச்சுறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்களுடன் முதல்வர் திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் மனு அளிக்கப்பட்டது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 August 2024

பழவேற்காடு அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் வழியில் பள்ளி மாணவ மாணவிகளை அச்சுறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்களுடன் முதல்வர் திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் மனு அளிக்கப்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், கோட்டைகுப்பம், லைட் ஹவுஸ், பிரளயம் பாக்கம், அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வண்ணம் இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

முகாமினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் துவக்கி வைத்தார்.முகாமில் பழவேற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் தினந்தோறும் காலை மாலை வேலைகளில் பள்ளிக்கு சென்று வரும்போது அவ்வழியில் பயமுறுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் மனு அளிக்கப்பட்டது.


மேலும் பி.எம். கிஷான் திட்டத்தில் இணைந்து அதனால் மீன்வள துறை திட்டங்கள் கிடைக்காமல் நீண்ட நாட்களாக சலுகைகளை பெற முடியாமல் இருந்த மீனவர்கள் பி.எம்.கிசான் ரத்து செய்யப்பட்ட விவரங்களையும் மீண்டும் மீன்வளத்துறை சலுகைகள் கிடைப்பதற்கான மனுவினையும் அளித்தனர். அதிகபட்ச மனுக்கள் முதியோர் ஓய்வூதியத்திற்கும் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்ப மனுக்களை அளித்தனர். 


இந்த முகாமில் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ்,குமார், மேலாளர் லீல் பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர்கள் பழவேற்காடு மாலதி சரவணன்,கோட்டைகுப்பம் சம்பத்,லைட் ஹவுஸ் கஜேந்திரன், தாங்கல் பெரும்புலம் ஞானவேல், அவுரிவாக்கம் முத்தழகி ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.கே.தமின்சா, கதிரவன், பழவை முகமது அலவி உள்ளிட்டோர் இது கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad