திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய சிறுளப்பாக்கம் கிராமத்தில் என்டிஇசி எல் நிறுவனத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் சுமார் பத்து லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற தலைவர் உஷா கணேசன், அரசம்மாள் ரவி, சதீஷ் ஆறுமுகம் செல்வழகி ஏகாம்பரம், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், இதில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி கலந்து கொண்டு புதியகுடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அனைத்து குடும்பங்களுக்கும் குடி தண்ணீர் பிடிக்கும் பிளாஸ்டிக் குடங்களை ஒன்றிய கவுன்சில் சுமித்ரா குமார் ஏற்பாட்டில் வழங்கினர் இதில் நந்தியம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், பழவை செட்டியாரம்மா, உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment