பொன்னேரி அடுத்த ஆண்டார் குப்பம் பகுதியில் நேற்று விடியற்காலை இருசக்கர வாகனத்தில் கடப்பாறையுடன் வந்த இருவர் முகத்தில் துணி கட்டியபடி ஆதிராஜன் என்பவரின் அரிசி கடை சேகர் என்பவரின் மளிகை கடை ஆகியோரின் ஷட்டர் பூட்டை உடைத்து திறக்க முடியாமல் அருகில் உள்ள சீனிவாசன் என்பவரின் கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று 5000 ரூபாய் பணத்தை திருடி சென்றும் அதே பகுதியில் உள்ள இரண்டு செல்போன் கடையில் பூட்டை உடைத்து திறக்க முடியாமல் விட்டு சென்றுள்ளனர்.
அரிசி கடையில் கடப்பாறை வைத்து ஷட்டரை உடைத்து திறக்க முடியாமல் கடப்பாறையை தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது மேலும் இது குறித்து வியாபாரிகள் தெரிவித்ததாவது ஆண்டார்குப்பம் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதாகவும் போலீசார் ரோந்து வர வேண்டும் எனவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர் மேலும் இதுகுறித்து பொன்னேரி போலீசார் சிசிடிவி கேமரா மூலம் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment