பொன்னேரி அருகே பரபரப்பு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால் பேருந்தை சிறைபிடித்த பள்ளி மாணவர்கள். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 August 2024

பொன்னேரி அருகே பரபரப்பு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால் பேருந்தை சிறைபிடித்த பள்ளி மாணவர்கள்.


பொன்னேரி அடுத்த அண்ணாமலைசேரி அரசு துவக்கப்பள்ளி அரசுஉயர்நிலைப் பள்ளி ஒரே பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது இதில் 250க்கு  மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் பள்ளியில் 18ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுத்து வந்த நிலையில் பணி மாறுதல் பணி ஓய்வு காரணமாக ஆசிரியர்கள் குறைவாக காணப்பட்டு கடந்த இரண்டு மாதமாக துவக்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரும் உயர்நிலைப் பள்ளிக்கு 3 ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்த நிலையில் மாணவர்கள் வீட்டில் பெற்றோர்களிடம் வேறு வேறு பாடப்பிரிவு ஆசிரியர்கள் பாடம் எடுப்பதாகவும், சரியாக புரியவில்லை எனவும் ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வருவதில்லை எனவும் தொடர்ந்து பெற்றோர்களிடம்  புகார் தெரிவித்து வந்த நிலையில்  பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் புகார் தெரிவித்தனர்.


இது குறித்து நடவடிக்கை இல்லாததால் பள்ளி மாணவர்கள் 2500க்கும் மேற்பட்டோர் இன்று காலை அண்ணாமலை சேரி பொன்னேரி சாலை பள்ளி அருகில் பள்ளிக்கு செல்லாமல் புத்தக பையுடன் சாலையில் அமர்ந்து 3 அரசு பேருந்துகளை சிறை பிடித்து பள்ளிக்கு கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த திரு பாலைவனம் போலீசார் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்த பின் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.


இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது பேருந்தில் பள்ளிக்குச் செல்லும் கல்லூரி  மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மீன் வியாபாரம் செய்பவர்கள் வாகன வசதி இல்லாததால் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad