பொன்னேரியில் மாவட்ட கூடுதல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட மாதவரம் மணலி செங்குன்றம் திருவொற்றியூர் பொன்னேரி மணலிபுதுநகர் சோழவரம் செங்குன்றம் கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் ஆரணி திருப்பாலைவனம் காட்டூர் கவரப்பேட்டை காவல் நிலைய செங்குன்றம் காவல் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடையே குற்ற வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கூடுதல் நீதிபதி கிருஷ்ணசாமி தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதில் காவல்துறையினரிடையே 5 வருடத்திற்கு மேலாக உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும் நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றவாளிகள் மற்றும் சாட்சிகள் சம்மன் மூலமாக அழைத்து விரைந்து முடிக்கவும் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன ஆலோசனை கூட்டத்தில் முதன்மை சார்பு நீதிபதி சரிதா கூடுதல் சார்பு நீதிபதி பிரேமாவதி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வண்ணமலர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் 1 சரண்யா செல்வம் குற்றவியல் நீதிமன்றம் 2 ஐயப்பன், மற்றும் காவல்துனை ஆணையர் பாலகிருஷ்ணன் உதவி ஆணையர் ராபர்ட் ராஜா அரசு வழக்கறிஞர்கள் காவல்துறை ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment