பொன்னேரியில் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு, சிறியவர்கள் பெரியவர்கள் கடும் அவதி. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 August 2024

பொன்னேரியில் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு, சிறியவர்கள் பெரியவர்கள் கடும் அவதி.


பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்த நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக ப்ளூ காய்ச்சல் எனப்படும் சளி இருமல் தொண்டை வலியால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர் இதனால் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில்  நோயாளிகள் கூட்டம் சமீபமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில்  பொன்னேரி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் வந்து செல்வதுண்டு சமீபகாலமாக  ப்ளூ காய்ச்சலால் அதிகம்பேர் வந்து செல்கின்றனர் இவை  பள்ளி மாணவர்களுக்கு அதிகமாக காணப்படுகின்றன, இது குறித்து தலைமை மருத்துவர் அசோகன் தெரிவித்ததாவது, பருவநிலை மாற்றம் காரணமாக ப்ளூ காய்ச்சல்  தொண்டை வலி உடல் வலி சளி, இருமல் சோர்வு, காணப்படுவதாகவும்  இந்த காய்ச்சல், நான்கு முதல் ஆறு நாட்கள் வரை இருக்கும். 


காய்ச்சலால் உயிருக்கு பாதிப்பு கிடையாது என்பதால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை ஒரு நாளைக்கு மேலாக காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனையை அணுகவும் . வீட்டு மருத்துவம் பார்க்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் எனவும் முக்கியமாக தண்ணீரை காய்ச்சல் குடித்து வந்தால் 90 % குணப்படுத்த முடியும் எனவும் மேலும்   வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காத வண்ணம் கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.


மேலும் இது குறித்து பொன்னேரி அரசு மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் பெனடிக் தெரிவித்ததாவது, ப்ளூ காய்ச்சல் எனப்படும்  சாதாரண காய்ச்சல் பருவநிலை மாற்றம் காரணமாக வருவதாகவும் குழந்தைகளுக்கு தண்ணீரை காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து கொடுக்க வேண்டும் எனவும் ஒரு நாளைக்கு மேலாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும்  மெடிக்கலில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரை வாங்க கூடாது எனவும் மருத்துவரின் ஆலோசனைப்படி கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad