மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் மூலம் சி எஸ் ஆர் நிதியில் இருந்து கல்வி சுகாதாரம் வாழ்வாதாரம், சமூக கட்டமைப்பு, இயற்கை சுற்றுசூழல் பாது காப்பு, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பல திட்டங்களை அப்பகுதி மக்களுக்கு செய்து வருகிறது இன்னிலையில் மீஞ்சூர் அடுத்த காட்டுரில் சுற்று வட்டார விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இயற்கை விவசாய விவசாயிகளுக்கு ஈடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி திட்ட இயக்குநர் ஜேசுராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அதானி காட்டுப்பள்ளி எண்ணுர் துறைமுக நிர்வாக அதிகாரி கேப்டன் மதன் மோகன் கலந்து கொண்டு விவசாயிகளிடையே சிறப்புரையாற்றி விவசாய இடுபொருட்களை வழங்கினார் இதில்ஊராட்சி மன்ற தலைவர்கள் காட்டுர் செல்வராமன் ஏ. ஆர் பாளையம் கவிதா மனோகரன் நெய்தவாயல் பாலன் கடப்பாக்கம் ஜெயந்தி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கினர் நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment