திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் நாகாத்தம்மன் நகர் இயேசுவின் தீர்க்கதரிசன ஆலயத்தில் சர்வதேச சுயாதின திருச்சபைகளின் இந்திய மாமன்றம் சிறப்பு போதகர்கள் கூடுகை இந்திய கிறிஸ்தவ சிறுபான்மை இயக்க தலைவர் பேராயர் ஐ.ஜான்ராஜ் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு தேவசெய்தியாளராக புது வாழ்வு ஜெம்ஸ் பேராலயம் சபை போதகர் ஐசக் டேனியல் கலந்துகொண்டு போதகர்களிடையே வேத சத்தியங்களை எடுத்து கூறி ஊழியத்தில் எவ்வளவு பாடுகள் வேதனைகள் இழப்புகள் வந்தாலும் தேவனை விட்டுவிடக் கூடாது என எடுத்துரைத்தார்.
இதில் IIC தலைவர் பேராயர் ஜோஸ்வா, சுப்புராம், ஆரோன் ராஜா., வின்சென்ட் ஜான், பால்ராஜ் , KC லாசரு உட்பட 50க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ போதகர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மதிய உணவு மற்றும் கூடுகையில் கலந்து கொண்ட போதகர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment