பொன்னேரி அருகே கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமான பணிகளை நீதிபதிகள் ஆய்வு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 August 2024

பொன்னேரி அருகே கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமான பணிகளை நீதிபதிகள் ஆய்வு.


திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்கள், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் என 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. பழமை வாய்ந்த கட்டிடம், மற்றும் போதிய இடவசதி இல்லாததால் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.49.28 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா கடந்த பெப்ரவரி மாதம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், முகமது சபிக் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர். 

இந்நிலையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை  பொன்னேரி மாவட்ட கூடுதல் நீதிபதி  கிருஷ்ணசாமி முதன்மை சார்பு நீதிபதி சரிதா கூடுதல் சார்பு நீதிபதி  பிரேமாவதி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி  வண்ணமலர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்  நடுவர் 1 சரண்யா செல்வம் குற்றவியல்  நீதிமன்றம் 2 ஐயப்பன் ஆகியோர்  பார்வையிட்டு அதிகாரிகளிடம் விரைந்து முடிக்க தெரிவித்தனர் பின்னர் நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆடி பெருக்கை முன்னிட்டு நீதிபதிகள்  மரக்கன்றுகளை நட்டனர் இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிட மற்றும் பராமரிப்பு மாவட்ட செயற்பொறியாளர் விஜய் ஆனந்த், ஒப்பந்ததாரர் தீன தயாளன்   பார் அசோசியேஷன் தலைவர் தேவேந்திரன் பொருளாளர் கிரி பாபு லாயர் அசோசியேஷன் தலைவர் ரமேஷ் செயலாளர் சுரேஷ் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீதர் நேதாஜி ஸ்ரீதர் மற்றும் வழக்கறிஞர்கள்  பெருந் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad