கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ் பேசுகையில் விரைவில் பருவமழை துவங்க உள்ளதால் மழைநீர் கால்வாய்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முறையாக தூர்வாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் ஒன்றியத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாலிவாக்கம் அழிஞ்சிவாக்கம் ஜெகநாதபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக பணிகள் வழங்கப்படவில்லை எனவும் எனவே அவர்களுக்கு உரிய முறையில் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதே போல் அலமாதி கவுன்சிலர் கர்ணன் பேசுகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டமான 100 நாள் வேலையில் உரிய முறையில் பணிகள் ஒதுக்கப்படவில்லை மேலும் அலமாதி பகுதியில் இயங்கி வரும் தனியார் உணவுக் கிடங்கில் சேரும் கழிவு பொருட்களை அலமாதி ஊராட்சிக்குட்பட்ட மற்றும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கும் இடத்தில் அனுமதி இல்லாமல் போடப்பட்டு வருகிறது மேலும் ஊராட்சியில் ஆன்லைனில் வீட்டு வரி குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆன்லைனில் ஏற்றாமல் மேனலில் வழங்கப்பட்டு வருகிறது இவற்றையும் சரி செய்ய வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து ஒன்றிய குழு துணைத் தலைவர் கருணாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து 100 நாள் வேலை பணிகள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தனர் கூட்டத்தில் சாலை வசதி மழைநீர் கால்வாய் பணிகள் நிறைவேற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டம் முடிவில் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நடைபெற்ற மழை சரிவில் உயிரிழந்த பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment