சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் எதிர்கால போக்குவரத்து வசதிகளையும் - தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு "சென்னை எல்லைச் சாலை திட்டம் (CPRR)" ரூ.16212.40 கோடி மதிப்பில் எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் வரை 133 கி.மீ தொலைவிற்கு ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது.
ஐந்து கட்டங்களாக நடைபெறும் இந்த பணிகளின் இரண்டாம் கட்டம் முடிவுறும் நிலையை எட்டியுள்ள சூழலில், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச்சாலையை நேரில் ஆய்வு செய்தனர், அடித்தளத்தில் இருந்து மேற்பரப்பு வரை சாலை பயன்படுத்தப்பட்ட கற்களின் மாதிரிகளை பார்வையிட்டு, வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு சாலையின் தடிமன் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர் படிப்படியாக பணிகள் நடைபெற்ற விதம் குறித்து அங்கிருந்த பொறியாளர்கள் எடுத்துக் கூறினார்கள்.
விரைவாகவும் முழுமையான தரத்துடனும் பணிகளை முடித்திடுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் ஏவ வேலு நெடுஞ்சாலை துறை செயலாளர் தரேஸ்அகமது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் திமுகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment