இந்த தாக்குதல் நடுக்கடலில் வெள்ளி மாவட்ட மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தால் பழவேற்காடு பஜாரில் கடைகளை அடைத்து போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்ட நிலையில் மீனவ பெண்கள் உட்பட ஏராளமானோர் பொன்னேரி பழவேற்காடு நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர் . வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறி பழவேற்காடு எல்லையில் மீன்பிடித்து வருவதை தொடர்ந்து பழவேற்காடு மீனவர்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மீனவர்கள் போராட்டம் நடைபெறும் தெரிவித்து கோஷங்களை மீனவர்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத் துறை இணை இயக்குனர் சந்திரா தாசில்தார் மதிவாணன் ஆவடி காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் உதவி ஆணையர் ராபர்ட் ராஜா மீனவர்களுடைய பேச்சு வார்த்தை நடத்தி 4 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படையுடன் இணைந்து பழவேற்காடு பகுதியில் ரோந்து வருவதாகவும் பாண்டிச்சேரி படகு மற்றும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும்,தெரிவித்ததின் பெயரில் போராட்டத்தை கைவிட்டனர் இன்று பழவேற்காடு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை, மேலும் பாதிக்கப்பட்ட லோகேஷ் திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் பாண்டிச்சேரி மீனவர்கள் 10 க்கும் மேற்பட்டவர்கள் ஆயுதங்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment