தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் மாநில பொறுப்பாளர் புஸ்லி ஆனந்த் ஆலோசனைப்படி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சார்பாக தொகுதி பொறுப்பாளர் சிலம்பரசன் தலைமையில் தொகுதி முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு பல நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் கணவனை இழந்த குடும்பங்கள் துப்புரவு பணியாளர்கள் உதவியற்ற குடும்பங்கள் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் ஏழைகளுக்கு தொழில் தொடங்க உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதோடு பொன்னேரி அடுத்த லக்ஷ்மிபுரம் கிராமத்தில் சம்பாதிக்க முடியாதபடி வறுமையில் வாடிய சரவணன் மேகலா குடும்பத்திற்கு தொகுதி நிர்வாகி. பாரத் அவர்களின் ஏற்பாட்டில் அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தொகுதி நிர்வாகி முரளி , மற்றும் பொன்னேரி நகர, மீஞ்சூர் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Post Top Ad
Tuesday, 6 August 2024
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment