மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய காட்டுப்பள்ளி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது, இம்முகாமை மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இதில் காட்டுப்பள்ளி ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகள் குறித்த மனுக்களாக தயார் செய்து உரிய அதிகாரிகளிடம் வழங்கினர்.இதில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, வேளாண்துறை உள்ளிட்ட 14 துறைகளை சார்ந்த அதிகாரிகளும் பங்கு பெற்று தீர்வளிக்கும் வண்ணம் முகாமில் பணியாற்றினர், ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ்,குமார்,மேலாளர் லீல்பிரசாத், அத்திப்பட்டு சாய் சரவணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் ஊராட்சி மன்றத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment