இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினர். திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏற்பாட்டில் 18 துறைகள் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்ற இந்த முகாமினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முகாமில் ஆசான பூதூர் எனும் கிராமத்தில் இருந்து வந்த குடிமகன் பிரபாகரன்( 47) தலைமையில் 20 க்கும் மேற்பட்ட குடிமகன்கள் தாங்கள் குடிப்பதற்கு 8 கிலோமீட்டர் தூரம் மெதுர் டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு திரும்பும் போது அடிக்கடி விபத்துக்கள் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், நேரங்கள் வீணாவதாகவும் அதனால் அருகிலுள்ள திருப்பாலைவனத்திலேயே அரசு மதுபான கடையை அமைக்க வேண்டும் என்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மனுவுடன் காத்திருந்தார்.
ஆனால் அந்த மனுவை எந்தத் துறை அதிகாரிகளும் பெறவில்லை, இறுதியாக திருப்பாலைவன ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரனிடம் இதை நான் யாரிடம் கொடுப்பது என கேட்கவே ஒரு வழியாக வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த மனுவை பெற்றுக் கொண்டனர். அதில் கூறி இருப்பதாவது திருப்பாலைவனம் ஊராட்சியில் அடங்கிய திருப்பாலைவனம், திருப்பாலைவனம் காலனி, ஓன்பாக்கம், செஞ்சி அம்மன் நகர், ஆலையம்மன் நகர் வஞ்சிவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதாகவும் அதில் 20% குடிமகன்கள் இருப்பதாகவும் அதிக தூரம் செல்ல இருப்பதால் திருப்பாலைவனத்திலேயே டாஸ்மார்க் அமைத்து தர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பிரபாகரன் ஒப்புதல் சீட்டைப் பெற்றுக் கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது எங்கள் பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் டாஸ்மார்க் கடைக்கு 8 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது இதனால் அடிக்கடி விபத்துக்கள் உயிர் இழப்புகள் ஏற்படுவதாகவும் சாலைகளில் விஷ ஜந்துக்கள் அடிக்கடி நடமாடுவதால் பாதிக்கப்படுவதாகவும் 30 வருடங்களுக்கு மேலாக குடித்து வருவதாகவும் வயதான காலத்தில் நீண்ட தூரம் நடந்து செல்ல சிரமப்படுவதாகவும் அருகிலே அமைக்க வேண்டும் என எங்களது கிராமத்தை சேர்ந்த குடிமகன்கள் சேர்ந்து கையெழுத்திட்டு மனு அளித்ததாகவும் தெரிவித்தார் இச்சம்பவம் முகாமில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment