திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆதித்தனார் அரங்கில் ஆல் இந்தியா ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் ரென்சி R பாஸ்கரன் 6வது டான் (இந்தியன் ரெப்ரஷன் டேட்டிவ் ஒகினாவா சோரின் ரியோ டென்டோ சிடோ கான் )அவரின் தலைமையில் நடைபெற்றது இதில் 350 க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் கட்டா மற்றும் குமித்தேவில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக விவேகானந்தா பள்ளி தாளாளர் மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் டாக்டர் என் மணிவண்ணன் அவர்களும், சமூக நற்பணி செம்மல் டிஜேஎஸ் பள்ளி இயக்குனர் தாளாளர், டி ஜே எஸ் தமிழரசன் அவர்களும் மற்றும் அவர்களுடன் சி நந்தகுமார் 5 வது டான்( இந்தியன் ரெப்ரெசனேட்டிவ் ஒகினவா ஷோரின் ரியோ தாய்சின்கான்) கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
போட்டி ஏற்பாட்டினை சென்சாய் சம்பத்குமார் 4 வது டான் சென்சாய் நந்தகுமார் 4 வது டான் சென்சாய் சரவணன் 4 வது டான் சென்சாய் பாலாஜி 4 வது டான் சிறப்பாக நடத்தினர்.
No comments:
Post a Comment