ஜே எஸ் டபிள்யூ நிறுவனம் மற்றும் இந்தியா விஷன் இன்ஸ்டிட்யூட் இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது இதன் வாயிலாக மீஞ்சூர், எண்ணூர் மற்றும் திருவள்ளூர் சுற்று புற பள்ளிகளில் 4000 மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்து இலவச கண் கண்ணாடிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதில் முதல் கட்டமாக மீஞ்சூர் அடுத்து காட்டுபள்ளி, அரசு உயர்நிலை பள்ளியில் ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்தின் முதன்மை மற்றும் மனித வள மேலாளர் பழனிசாமி, தமிழ் இனிய குமார் மேலாளர், முன்னிலையில் துவங்கபட்டது.
அதில் 103 பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்து, குறைபாடு உள்ள 26 மாணவர்களுக்கு உடனடியாக கண்ணாடி வழங்க பட்டது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.
No comments:
Post a Comment