திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி செங்குன்றம் சாலையில் உள்ள இந்திய சுவிசேஷ திருச்சபை தூய பேதுரு தேவாலயத்தின் 50-வது ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி, சபைஆயர் பக்த சுந்தர் சிங் ஏற்பாட்டில் இசிஐ பொன்னேரி நகர இயக்குனர் பால் உதயசூரியன், தலைமையில் இசிஐ சென்னை பேராயசெயலாளர் ஜார்ஜ் முல்லர், பொருளாளர் நிக்கனோர் முன்னிலையில் நடை பெற்றது.
பொன்விழா சிறப்பு செய்தியாளர் இசிஐ சென்னை பேராயம் பேராயர் டாக்டர். கதிரொளி மாணிக்கம் வேத சத்தியங்களை எடுத்து கூறி சிறப்புரையாற்றி ஆசிர்வதித்தார். டாக்டர் ஜெய் சிங், சௌந்தர பாண்டியன், ஸ்டீபன் ஜெபமாரிஸ், மைக்கேல், லாரன்ஸ் ஜான், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முன்னதாக கடந்த இரு தினங்க ளாக ராஜ்குமார் நற்செய்தி கூட்டங்களை நடத்தினார்.
இதனையடுத்து ஞானஸ்நான ஆராதனை, ஏழை எளியோருக்கு உணவு உடை வழங்கினார். வேதாகமத்தேர்வு நடைபெற்றது. பின்னர் மறைபணியா-- அறப்பணியா, சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.நற்செய்தி கூட்டங்கள், பாடகர் குழு பாடல் போட்டி, பஜனை பிரசங்கம் நடைபெற்றது. இதில் மூப்பர் குழு பொன்விழா கமிட்டி மற்றும் விசுவாசிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment