பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வு; நோ டச் முறையை கடைப்பிடிக்க வேண்டும் மாணவிகளுக்கு அறிவுரை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 24 August 2024

பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வு; நோ டச் முறையை கடைப்பிடிக்க வேண்டும் மாணவிகளுக்கு அறிவுரை.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் ரைஸ் அண்ட் ஷைன் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில்  ரைஸ் அண்ட் சைன் இயக்குனர் வசந்தி செல்வராஜ் தலைமையில்  வேண்பாக்கம் ஜெய் கோபால் கரடியா அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்தூரி முன்னிலையில் மாணவிகளிடையே விழிப்புணர்வு நடைபெற்றது.

இதில் பூதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் கலாவதி நார வாரி குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் ஜெய் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளிடையே தன் சுத்தம்,பால்வினை நோய், தொற்று நோய் , குறித்தும் குழந்தைகள் பாலியல் தொல்லை, பாதுகாப்பு, இளம் பெண்கருத்தரித்தல், தன்னைத் தானே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுதல், செல்போன் பயன்படுத்தும் போது பேஸ்புக் இன்ஸ்டாகிராம் வாட்ஸப், மூலம் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.


மேலும் பெண்கள் மீது யாரேனும் தொட்டால் உடனடியாக பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நோ டச் என்று சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தனர் வழக்கறிஞர்கள் தேவராஜ், வினோத், பெண்களின் பாதுகாப்பு  சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார் நிகழ்ச்சியில் டிரஸ்ட் செயலாளர் ஞானசேகர் நிர்வாகிகள் மணிபாலன், நவீன் குமார், கணேஷ் குமார், சூர்யா,  மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் 1200  க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இறுதியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad