போக்சோ குறித்து மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு , உலக சாதனை நிகழ்ச்சி - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2024

போக்சோ குறித்து மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு , உலக சாதனை நிகழ்ச்சி


சமூகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) வடிவமைப்பில் மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி  நாட்டு நலப்பணித் திட்டம்(NSS) மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம்(YRC) சார்பில் கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி அவர்கள் தலைமையில், NBS - PEOPLE RIGHTS CORPORATION தலைவர் முனைவர் பாலசரவணன் அவர்கள் முன்னிலையில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டு  விழிப்புணர்வை ஏற்படுத்தி உலக சாதனை  நிகழ்வினை திறம்பட நிகழ்த்தினர்.


இந்த விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வில்  காவல் துணை ஆணையாளர்- போக்குவரத்து பிரிவு ஆவடி காவல் ஆணையரகம் ஜெயலட்சுமி ஜபிஎஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வில் INGENIOUS CHARM WORLD RECORDS  தலைவர் ஆனந்த் ராஜேந்திரன் மற்றும் பிந்து பிரியங்கா ஆகியோர் உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை வழங்கினர். 


இக்கல்லூரி சார்பில் கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி அவர்கள் பெற்றுக்கொண்டார். அப்போது கல்லூரி துணை முதல்வர் முனைவர் சசிகலா மற்றும் ஒருங்கிணைப்பாளரும் ,நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்வில் ஆவடி போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி ஜபிஎஸ் அவர்கள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவது பற்றியும், குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், பாதுகாப்புச் சட்டங்கள் பற்றிய பல ஆலோசனைகளை வழங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


இந்நிகழ்வில் திறளான மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் என்.பி. எஸ் தன்னார்வலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad