விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுகவினர் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகர திமுக சார்பில் மாவட்ட செயலாளர் டி ஜே எஸ் கோவிந்தராசன் ஆலோசனை படி பழைய பேருந்து நிலையம் அருகில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் நகரச் செயலாளர் ரவிக்குமார் நகர மன்ற தலைவர் பரிமள விஸ்வநாதன் அவைத் தலைவர் செங்கல்வராயன், நீலகண்டன் ஜோதீஸ்வரன் முருகானந்தம் நல்லசிவம் ராஜன், ஜீவானந்தன், ருக்மநாதன், மூர்த்தி, நரேஷ், கணேஷ் பாலச்சந்தர் நகர இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் மா.தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment