பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமுருகன்.(37) துணி வியாபாரம் செய்து வரும் இவர் பாஜக மீஞ்சூர் ஒன்றிய நெசவாளர் பிரிவு தலைவர் ஆவார், இவர் நேற்று வெளியூர் சென்றிருந்த நிலையில் இவரது மனைவி பவானி அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் இன்று அவரதுமனைவி காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை பார்த்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவை திறந்து பீரோவில் இருந்த 2 சவரன் நகை 10,000 ரூபாய் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது, இது குறித்து பொன்னேரி காவல் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் பொன்னேரி காவலா ஆய்வாளர் குணசேகரன், சம்பவ இடத்திற்கு சென்று அருகில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment