திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வட இந்தியாவில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரி பகுதி குழு தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கே எஸ் கார்த்திஸ்குமார் கலந்துகொண்டு வடமாநிலங்களில் உள்ள சிறுபான்மை மக்கள் கொடூரமாக தாக்கப்படுவதை கண்டித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எஸ் எம் ஹனிப் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை காளமேகம் பொன்னேரி பகுதி செயலாளர் முகமது ஷகில் துணைத் தலைவர் ஜோசப் சந்திரன் துணைச் செயலாளர் கபில் நாசர், ஜே கே விஜய் மற்றும் பொன்னேரி சிறுபான்மை மக்கள் நலக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக சிறுபான்மை மக்களை தாக்கும் மத்திய அரசு மீது கண்டன குரல் எழுப்பப்பட்டன
No comments:
Post a Comment