கும்மிடிப்பூண்டியில் பெண்களுக்கு பனை ஓலையில் கைவினை பொருட்கள் செய்ய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 July 2024

கும்மிடிப்பூண்டியில் பெண்களுக்கு பனை ஓலையில் கைவினை பொருட்கள் செய்ய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


கும்மிடிப்பூண்டியில் பெண்களுக்கு பனை ஓலையில் கைவினை பொருட்கள் செய்ய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, plastic matraga பனை ஓலை பொருட்களின் பயன்பாடுகள் மற்றும் அதை சந்தைப்படுத்துதல் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கும்முடிபூண்டி  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்த மன்னன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் முதன்மை கட்டுமான மேலாளர் ரமேஷ் பாபு மற்றும் கட்டுமான மேலாளர் ரவிவர்மா, மத்திய பனை பொருள் உற்பத்தி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பிரபாகர், துணை இயக்குனர் பிரபாகரன்,  கும்மிடிப்பூண்டி வட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ருக்கேந்திரராவ், திருவள்ளூர் மாவட்ட பனை விதை வங்கியின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், மக்கள் நலப் பணியக்க அறக்கட்டளையின் செயலாளர் லெனின்லோகேஷ், அசாருதீன், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் மற்றும்  வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் 500 க்கும் மேற்பட்ட பழ மரக்கன்றுகளை வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad