பொன்னேரி அருகே பல ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தி வரும் களம் மேட்டை அழித்து குளம் வெட்டும் ஊராட்சி நிர்வாகத்தை தடுத்து நிறுத்த கோரி பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 July 2024

பொன்னேரி அருகே பல ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தி வரும் களம் மேட்டை அழித்து குளம் வெட்டும் ஊராட்சி நிர்வாகத்தை தடுத்து நிறுத்த கோரி பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கனகவல்லிபுரம் கிராமத்தில் களம் புறம்போக்கு மற்றும் மந்தவெளி புறம்போக்கு என மொத்தம் இரண்டு ஏக்கர் நிலங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தி வரும் இந்த இடம் அமைந்துள்ள களத்தில் ஊராட்சி நிர்வாகத்தால் குளம் வெட்டப்படுகிறது.

சுமார் 5000 முதல் 10,000 வரை நெல் மூட்டைகள் களத்து மேட்டில் பாதுகாப்பது வழக்கம்.ஆனால் ஊராட்சி நிர்வாகம் இந்த இடத்தில் குளத்தை அமைத்தால் விவசாயிகள் பெறும் பாதிப்பு அடைவார்கள். அதனை மாற்று இடத்தில் அமைக்க விவசாயிகள் சார்பாக தொடர்ந்து மனு கொடுக்கப்பட்டு அதன் மீது சரியான நடவடிக்கை இல்லை எனவும் இதுகுறித்து பொதுமக்களிடமோ வார்டு உறுப்பினர்களிடமோ எந்தவித கருத்து கேட்கும் கூட்டம் ஊராட்சி நிர்வாகம் நடத்தவில்லை எனவும், ஊராட்சி மன்ற தலைவர் ப்ரியா என்பவரின் கணவர் ராஜேஷ் கண்ணா தனது முழு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு 100 நாள் வேலை செய்யும் கிராம மக்களை பயன்படுத்தி விவசாயம் பாதிக்கப்படும் இடத்தில்தான் குளம் அமைத்தே ஆக வேண்டும் என்று தன்னிச்சையாக செயல்படுவதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமான களத்து மேட்டினை பாதுகாத்திடும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அந்த கிராம மக்கள் பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்திற்கு வந்து சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷிடம் புகார் மனு அளித்தனர். 


பின்னர் இது குறித்து சாராட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் கிராம மக்களை அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதால் பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad