திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள நலவாரிய அலுவலகத்தின் முன்பு சிஐடியு தொழிலாளர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் விஜயன் தலைமை வகித்தார், மாவட்டத் தலைவர் நாகராஜன், பொருளாளர் லட்சுமணன்,துணை செயலாளர் சீனு, துணைத் தலைவர் முனுசாமி மற்றும் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
மேலும் ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களை வாரியத்தில் அமைக்க வேண்டும், புதியதாக பதிவு பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு மாத கால இடைவெளியில் ஒப்புதல் வழங்க வேண்டும், ஒருமுறை பதிவு செய்தால் அந்த கோப்புகளை மீண்டும் மீண்டும் கேட்கும் அவலத்தை கைவிட வேண்டும், பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ஆட்டோ ஓட்டுநர்கள்,கட்டுமான தொழிலாளர்கள்,சிஐடியு பொறுப்பாளர்கள்,என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment