திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சகாயமாதா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சியின் நாளாக பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராணி தலைமையில் கொண்டாடப்பட்டது விழாவில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் கலந்துகொண்டு மாணவர்களிடையே காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்து மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் மாணவர்களை பல துறை அதிகாரிகளாக உருவாக்குவது கல்வி மட்டுமே எனவும் கல்வியோடு மாணவர்கள் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் மாணவர்களிடையே சிறப்புடையாற்றினார்
இதில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர் முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்க பட்டன
No comments:
Post a Comment