திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள பூவாமி கிராமத்தில் நேற்று இரவு பெய்த திடீர் மழை காரணமாக விவசாய நிலத்தில் இருந்த மின் கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இவ்வழியாக மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு மாடுகள் மின் கம்பிகளை மிதித்து சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளது. மாட்டின் உரிமையாளர்களான ஜானகிராமன், வினோத் ஆகியோர் மாடுகளை தேடிச்சென்ற போது வயலில் அறுந்து விழுந்த கம்பிகளின் மீது மாடுகள் விழுந்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மெதூர் துணை மின் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன் பேரில் மின் ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாடுகள் இறப்பு குறித்து காவல்துறையினர் மற்றும் மின்சாரத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment