குடிநீருடன் கழிவு நீர் கலப்பதாக கவுன்சிலர் புகார் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 July 2024

குடிநீருடன் கழிவு நீர் கலப்பதாக கவுன்சிலர் புகார் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு.


பொன்னேரி நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நகராட்சி நகர் மன்ற கூட்ட அரங்கில்  நகர தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலையில்  நடைபெற்றது இதில் கலந்துகொண்ட 11 வது வார்டு கவுன்சிலர் யாக்கோபு  கூட்டம் ஆரம்பித்தவுடன் நகர மன்ற தலைவர் பேசிக் கொண்டிருக்கும்போது  கொண்டு வந்த பாட்டிலில் சாக்கடை நீர் கலந்த தண்ணீரை எடுத்து காண்பித்து தங்களது பகுதியில் 15 நாட்களாக குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதாகவும் பொதுமக்கள் அதிக விலைக்கு கேன் குடிநீர் வாங்கி  குடித்து வருவதாகவும் வெளியில் நடந்து செல்ல முடியவில்லை எனவும் பொதுமக்கள் கேள்வி கேட்பதாகவும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும்  நகராட்சி நிர்வாக நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி பாட்டிலில் கழிவு நீருடன் கூட்டத்தில்  தெரிவிப்பதாகவும்  கழிவு நீர் கலந்த குடிநீர் பொதுமக்கள் குடித்து யாருக்காவது உயிருக்கு ஆபத்து நேரிட்டால் முழு பொறுப்பு நகராட்சி நிர்வாகம் எனவும்  தனது வார்டை புறக்கணிப்பதாகவும் இதுவரை தனது வார்டில் பொதுமக்களுக்கு  எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என தெரிவித்து நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூட்டத்தை புறக்கணிப்பதாக  வெளிநடப்பு செய்தார் இதனால் பொன்னேரி நகராட்சியில் பெரிது பரபரப்பு காணப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad