நியாய விலைக் கடை கட்டிட கட்டுமானத்தை தடுத்து நிறுத்திய பொதுமக்கள். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 July 2024

நியாய விலைக் கடை கட்டிட கட்டுமானத்தை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்.


பொன்னேரி அடுத்த  மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அகர  ஊராட்சியில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன இப்பகுதியில்  நியாய விலைக் கடை இல்லாததால் அகரம் ஊராட்சி தேவம்பட்டில்  600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு நெல், உரம் சேமிக்கும் கிடங்கில் வைத்து பொதுமக்களுக்கு  பொருட்கள் விநியோகிக்க பட்டு வந்தன இந்நிலையில்  18 லட்சம் ரூபாய் மதிப்பில் தேவம்பட்டில் புதிதாக ரேஷன் கடை  கட்டுவதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில் அகரம் ஊராட்சிகுட்பட்ட அரங்கம் காலனி தெலுங்கு காலனி, தேவம்பட்டுமேடு, தேவம்பட்டு காலனி, பகுதி பொதுமக்கள்  300க்கும் மேற்பட்டோர் கடைக்கட்டும் தேவம்பட்டு பகுதியில் 35 குடும்ப அட்டைகள் மட்டும் உள்ளன எனவும் எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன எனவும் பொருட்கள் வாங்குவதற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் இருப்பதாகவும் வயதானவர்கள்  செல்ல முடியாது எனவும், போக்குவரத்து வசதி இல்லை எனவும்  எங்கள் பகுதியில் அருகில் இடத்தை தேர்வு செய்து  நியாய விலை கடையை கட்ட வேண்டும் எனவும் திடீரென 300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் வேலையை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad