தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் (பொருட்கள் மற்றும் துரித உணவுகள்) வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ள சிறப்பு உதவி முகாம் அமைக்கப்பட்டுள்ளது இந்த சிறப்பு உதவி முகாம் கடந்த 27ஆம் தேதி முதல் வருகிற ஐந்தாம் தேதி வரை காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை கிக் (GIG) தொழிலாளருக்கான பதிவுகள் எண் 58 சிந்தூர் நகர் தடப்பெரும்பாக்கம், கொக்கு மேடு பேருந்து நிலையம், பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கிட் தொழிலாளர்கள் ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை ,பிறந்த தேதிக்கான ஆவணம், பள்ளிச் சான்றிதழ்,பிறப்புச் சான்றித வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இந்த ஆவணங்களை எடுத்து வந்து நேரில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம் தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதுப்பித்துக் கொள்ளவும் என பொன்னேரி சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அ.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment