பொன்னேரி அடுத்த பெரும்பேடு சாலை தேவராஞ்சேரி கிராமத்தின் அருகில் உள்ள சாலையோர தனியார் எடை மேடை பள்ளத்தை சுற்றி நாய் ஒன்று குறைத்தபடி சுற்றி சுற்றி வந்தன அவ்வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்த போது 12 அடி ஆழத்தில் நாய்க்குட்டி தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிய நிலையில் சத்தம் கேட்பதை கண்டறிந்து பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிற்றின் உதவியுடன் பள்ளத்தில் இறங்கி நாய்க்குட்டியை மீட்டனர், இதனை தூரத்தில் இருந்து பார்த்த தாய் நாய் ஓடி வந்து பாசத்துடன் முகர்ந்து நக்கியது பின்னர் வாயால் கவ்வி கொண்டு சென்று பாசத்துடன் குட்டிக்கு பால் கொடுத்தது தாயுடன் நாய்க்குட்டி சேர்ந்த பாச பிணைப்பு பார்ப்பவர்கள் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீரை வரவழைத்தன நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
No comments:
Post a Comment