திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொடூர பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் ஜெபஸ்டின் இவர் பொன்னேரி அடுத்த ஆமூர் சாலை அருகே பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார் இந்நிலையில் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆமூர் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஆனந்தன் கடைக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்பை ஜேசிபி இயந்திரம் மூலம் துண்டித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கடையின் உரிமையாளர் மைக்கேல் ஜெபஸ்டின் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஆனந்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார் இது குறித்து சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது மேலும் இது குறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment