சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமுக விரோதிகளால் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுத்து கொலைச் செயலில் ஈடுப்பட்டவர் காவல் நிலையத்தில் சரண்டர் ஆன நிலையில்.தலைமறைவாக உள்ள கொலைக்கு காரணமனவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டும்.
சில நாட்களாக தமிழகத்தில் வண்டலூர், சேலம், மாமல்லபுரம் தற்போது பெரம்பூர் என தொடர் கொலைகளால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. தமிழக அரசு சட்ட ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்து பொது மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை வேண்டும். என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மாநில தலைவர் டாக்டர் இ. மெய்யழகன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment