பாஜக நிறுவன தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 July 2024

பாஜக நிறுவன தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மேலுரில் பாஜக நிறுவன தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 123 வது பிறந்தநாளை முன்னிட்டு அமைப்பு சாரா மற்றும் மக்கள் சேவை பிரிவு சார்பாக மேலூர் ஏ. என். எம் உயர்நிலை பள்ளியில் 100 மரக்கன்றுகள்  தாய் பெயரில் நடும் விழா மற்றும் அன்னதானம், புடவைகள் வழங்கும் விழா அமைப்பு சாரா மற்றும் மக்கள் சேவை பிரிவு மாவட்ட தலைவர் வருண்காந்தி, தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ராதாகிருஷ்ணன்  பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டு அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிஜேபி நிறுவன தலைவர்  சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர் பின்னர் ஏழை எளியவர்களுக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது 100 மரக்கன்றுகள்  தாய் பெயரில் பள்ளியில் நடப்பட்டன.


நிகழ்ச்சியில் அன்பாலயா சிவகுமார். மாநிலத் துணைத் தலைவர் பட்டியல் அணி மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள் பரமானந்தம் மற்றும் தங்கமணி அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட செயலாளர்கள். அனு அப்புராஜ் சத்யா நந்தகோபால் ஒன்றிய தலைவர் ஜெயகாந்தன் ஒன்றிய துணைத் தலைவர் புருஷோத்தமன் மற்றும் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர்  கவிதா ஒன்றிய தலைவி மகளிர் அணி அபிதா மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர் சங்கர் ராஜமன்னார் மணிகண்டன் ஒன்றிய பொருளாளர் சிவராஜ் ஒன்றிய செயலாளர் ஆகாஷ் மற்றும் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad