பனைமரம் வெட்டப்பட்ட இடத்தில் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் ஆய்வு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 July 2024

பனைமரம் வெட்டப்பட்ட இடத்தில் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் ஆய்வு.


சோழவரம் அடுத்த பூதூர்  கிராமத்தில் அரசு தாங்கல் கரை புறம்போக்கு நிலத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை தனிநபர் ஜேசிபி எந்திரம் மூலம்  வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன இரவோடு இரவாக வெட்டி சாய்க்கப்பட்டுள்ள பனை மரங்கள் வெட்டப்பட்டு இருப்பது  குறித்து அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் வருவாய்த்துறையினர் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

சோழவரம் போலீசார் இது குறித்து விசாரித்து வரும் நிலையில் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பனைமரம் வெட்டப்பட்ட இடத்தில் நேரில் வந்து ஆய்வு செய்து பேட்டி அளித்த போது தமிழகத்தில் ஒரு கோடி பனை விதைகள் 1076 கிலோமீட்டர் 14 கடலோரங்களில் விதைக்கப்பட்டுள்ளன எனவும் பனைமர வேர்கள் மழை நீரை சேமித்து வைத்துக் கொள்வதாகவும் தமிழகத்தில் 15 கோடி பனை மரங்கள் உள்ள நிலையில் தற்போது குறைந்து கொண்டு 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன எனவும் தற்போது திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூதூரில் தாங்கள் கரை ஓரத்தில் நீர் நிலைகளை பாதுகாக்க  நடப்பட்ட 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்த நிலையில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.


இது குறித்து பனை மரத்தினை வெட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் பனை மரத்தினை வெட்டுவது தடுக்க வேண்டும் எனவும் நீர் ஆதாரத்தினை பெறுக்க கிராமங்களில் பனை விதைகளை விதைத்து பனைமரம் உருவாக்க வேண்டும் எனவும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமாக பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் இதில் வடசென்னை  சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ் தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், பசுமை இயக்கம் தொழிலதிபர் அகிலன், பசுமை இயக்கம்,பாலன், சதீஷ், சிவா, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad