கடல் அலையின் அரிப்பால் பழவேற்காடு சாலை சேதம் ஏரியும் கடலும் ஓன்று சேரும் நிலை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 July 2024

கடல் அலையின் அரிப்பால் பழவேற்காடு சாலை சேதம் ஏரியும் கடலும் ஓன்று சேரும் நிலை.


பொன்னேரி அடுத்த பழவேற்காடு காட்டுப்பள்ளி கருங்காலி அருகில் உள்ள பள்ளப்பாடு என்ற இடத்தில் கடந்த மாதத்தில் இரண்டு வாரமாக கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் சாலையின் மீது மோதி அடித்ததில் சாலை அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் 1.1/2கி.மீ தூரத்திற்கு 4 மீட்டர் உயரம் அளவிற்கு சாலையில் கடல்மணல் நிரம்பியது வாகன ஓட்டிகள் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த நிலையில்  இந்த சாலை வழியாக நூற்றுக்கனக்கான வாகனங்கள் வேலைக்கு செல்பவர்கள் அதானி துறைமுகம், எல்என்டி துறைமுகம்,, காமராஜர் துறைமுகம், மற்றும் சென்னை செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்று வருவதாகவும், இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும்  தெரிவித்த நிலையில் தற்காலிகமாக இரண்டு ஜேசிபி மூலம் மணலை அகற்றி சாலையின் ஓரத்தில் குவிக்கப்பட்டது.

பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் சென்று கொண்டு வந்தன இந்நிலையில் நேற்று முன் தினம் திடீரென கடல் அலை அதிகமாக காணப்பட்டு பழவேற்காடு காட்டுப்பள்ளி சாலை முழுவதும் கடல் நீரால் நிரம்பி சாலைகள் அரிப்பு ஏற்பட்டு மணலால் நிரம்பி உள்ளன இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில்  வேலைக்கு செல்பவர்கள் வியாபாரிகள் பொது மக்கள்  ஆண்டார் மடம் வஞ்சிவாக்கம், காட்டுர் வாயலூர்,மீஞ்சூர் அத்திபட்டு வழியாக 40 கிலோ மீட்டர் தூரம் சென்று வருவதாகவும் சாலை முழுவதும் சேதமடைந்தால்பழவேற்காடு எரியும் கடலும் ஓன்று சேரும் நிலை ஏற்படுவதாகவும் இதனால் போக்கு வரத்து முற்றிலும் தடை படும் எனவும் சாலை சேதமடைந்த இடத்தில் தற்காலிக சாலை அமைக்கவும்  பள்ளபாடு இடத்தில் கடல் நீர்  சாலையில் வராமல் தடுக்க பெரிய கற்கள் அல்லது தடுப்பு சுவர் அமைக்கவும் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் பொன்னேரி சாராட்சியர் உதவியாளர் சுரேஷிடம் மனு அளித்தார் இது குறித்து சார் ஆட்சியரிடம் தெரிவித்து  ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad